ப. பாலசுப்பிரமணியம்
கூட்டாகச் சேர்ந்து நூல்களை வாசிக்கும்போது சமுதாயத்தின் வெவ்வேறு பின்னணியிலிருந்தும் வருபவர்கள் ஒன்றிணைகின்றனர் என்றும் நூல் வாசிப்புப் பழக்கம் சிங்கப்பூரர்கள் நடைமுறை வாழ்க் கையில் ஒன்றாகவேண்டும் என் றும் வர்த்தக தொழில்; கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார். சிற்பிகள் வாசிப்பு மன்றத்தின் 10வது ஆண்டு நிறைவையும் தேசிய நூலக வாரியத்தின் தேசிய வாசிப்பு தினத்தையும் முன்னிட்டு ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் நேற்று காலையில் நடந்த கூட்டு புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
சிற்பிகள் மன்றத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள், ஸ்ரீ நாராயண மிஷன் இல்லவாசிகளுக்கும் இல்லத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் சிறார்களுக்கும் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து ஆங்கில, தமிழ்ப் புத்தகங்களை வாசித்துக்காட்டினர். தேசிய வாசிப்பு இயக்கத்தின் ஓர் அங்கமாக 15 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாசிக்கும் 10 பேருக்கு ஒரு புத்தகத்தைத் தேசிய நூலக வாரியம் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவிபெறும் அமைப்புக்கு நன்கொடையாக வழங்கும்.
சிற்பிகள் மன்ற தொண்டூழியரான குமாரி சலோமி சோனியா ராஜ், ஸ்ரீ நாராயண மிஷன் இல்லவாசிகளுக்கு புத்தகத்தை வாசித்துக் காட்டுகிறார். திரு ராமசந்திரன் (நடுவில்) ஆர்வத்துடன் செவிமடுக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்