புதுடெல்லி: இந்த ஆண்டு இந்தி யாவின் ஆறு மாநிலங்களில் பெய்த பருவமழை, வெள்ள பாதிப்பு களுக்கு சுமார் 537 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதில் ஆக அதிகமாக மகாராஷ்டிராவில் மட்டும் 138 பேர் பலியாகினர். கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், அசாம், உத்தரப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் பெய்து வரும் பருவமழை காரண மாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
இதுதொடர்பாக மத்திய உள் துறை அமைச்சின் தேசிய அவசர கால மீட்பு மையம் வெளியிட் டுள்ள தகவல்களின்படி, ஆறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக மகாராஷ்டிராவில் 138 பேரும் கேரளாவில் 125 பேரும் மேற்கு வங்கத்தில் 116 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 70 பேரும் குஜராத்தில் 52 பேரும் அசாமில் 34 பேரும் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் 26 மாவட் டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளன. இதற்கு அடுத்ததாக மேற்கு வங்கத்தின் 22 மாவட்டங்கள், அசாமின் 21 மாவட்டங் கள், கேரளாவின் 14 மாவட்டங்கள், குஜராத்தின் 10 மாவட்டங்களுடன் உத்தரப்பிர தேசத்தின் பெரும் பாலான பகுதிகளும் கனமழை, வெள்ளப் பாதிப்புக்கு இலக்காகி உள்ளன.
புதுடெல்லியில் யமுனா நதிக் கரை ஓரம் கட்டப்பட்டிருந்த வீட்டை இப்படி வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் யமுனை ஆற் றில் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. படம்: இபிஏ