தோக்கியோ: ஜப்பானில் பயங்கர புயல்காற்று வீசுவதுடன் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 'ஜாங்டரி' என்று பெயரிடப் பட்டுள்ள புயல் தாக்கும் வேளையில் தோக்கியோ விலும் ஹான்சு தீவுப் பகுதியிலும் கனமழை பெய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் புயல் காற்று, இடைவிடாது பெய்யும் மழை இவற்றின் காரணமாக சுமார் 150,000க்கும் மேற்பட்ட வீடு களுக்கு மின்சார விநியோகம் கிடைக்காமல் அவை இருளில் மூழ்கியதாக ஜப்பானிய ஒலிபரப்புக் கழகத் தகவல் தெரிவிக்கிறது.
புயல் காற்றில் சுமார் 16 பேர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. சக்திவாய்ந்த புயல் காற்று ஜப்பானை நெருங்குவதற்கு முன்னதாகவே மேற்குப் பகுதியில் உள்ள இரு நகரங்களிலிருந்து 36,400 பேரை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்ட தாகவும் அதிகாரிகள் கூறினர். ஜூலை மாத தொடக்கத்தில் ஜப்பானில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் நீர் நிரம்பி ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடியபோது சுமார் 8 மில்லியன் பேரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு அதிகாரி கள் கேட்டுக்கொண்டனர். வெள்ளப்பெருக்கில் சிக்கி 200 பேர் உயிரிழந்தனர்.
புயலால் எழும்பிய ராட்சத அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். படம்: இபிஏ