நோம்பென்: கம்போடியாவில் நேற்று நடந்த வாக்களிப்பு சுதந் திரமாகவோ அல்லது நியாய மாகவோ நடைபெறவில்லை என்று மனித உரிமை குழுக்கள் கூறியுள்ளன. இந்தத் தேர்தலை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக் கணித்ததால் பிரதமர் ஹூன் சென்னை எதிர்த்து மிகச் சிறிய கட்சிகளின் வேட்பாளர்களே போட்டியிட்டனர். 33 ஆண்டு காலமாக பிரதமராக நீடிக்கும் ஹூன்சென் இந்தத் தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் திடமாக நம்புகின்றனர்.
ஆனால் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்ட தாகவும் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாகவும் எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ள னர். நேற்று நடந்த தேர்தலில் 70 விழுக்காட்டு மக்கள் வாக்களித்ததாகக் கூறப்பட்டது. முதல்கட்ட தேர்தல் முடிவுகள் நேற்றிரவு வெளியாகத் தொடங் கினாலும் அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகளள் வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.