'எழுமின்' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் தனுஷ். விவேக் முதன்மைக் கதாபாத்திரத் தில் நடித்துள்ள இப்படம் தற் காப்புக் கலையின் சிறப்புகளை விவரிக்கும் படைப்பாக உருவாகி உள்ளது. தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள்தான் கதை யாம். விவேக்குக்கு இணையான கதாபாத்திரத்தில் தேவயானி நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலைப் பாடித் தரவேண்டும் என தனுஷை அணுகினாராம் தயாரிப்பாளரும் இயக்குநருமான வி.பி. விஜி. இந்தப் பாடலைப் பாடலாசிரியர் தமிழணங்கு எழுதியுள்ளார். கணேஷ் சந்திரசேகர் இசையமைத் துள்ளார். 'எழடா எழடா' எனத் துவங்கும் இந்தப் பாடல்தான் கதையின் ஓட்டத்தில் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்துமாம். "கேட்டவுடன் உத்வேகம் உண்டாகும் வகையில் தமிழணங்கு எழுதி உள்ள வரிகளை தனுஷ் பாடினால்தான் சரியாக இருக்கும் எனக் கருதினேன். இதை இசை அமைப்பாளரிடம் சொன்னபோது அவரும் ஏற்றுக்கொண்டார்.