சிங்கப்பூரும் மலேசியாவும் அணுக்கமாகச் சேர்ந்து செயல் பட்டு இருதரப்பு உறவையும் வட் டார ஒத்துழைப்பையும் பலப்படுத்த முடியும் என்று தான் நம்புவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். டாக்டர் விவியன் நேற்று சிங்கப்பூரில் மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல் லாவைச் சந்தித்தார். அதற்குப் பிறகு அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார். புதிதாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள மலேசிய அமைச்சர் இரண்டு நாள் அறிமுக பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந் திருக்கிறார். இங்கு நடைபெறும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத் திலும் அதன் தொடர்பான இதர கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.
மலேசிய அமைச்சரைச் சந்தித்த போது தாங்கள், இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட பரந்த அளவிலான ஒத் துழைப்பு பற்றி பேசியதாகவும் ஒன் றாகச் சேர்ந்து செயல்படுவதற்கான புதிய வாய்ப்புகள் பற்றி யோசனை களைப் பகிர்ந்துகொண்ட தாகவும் டாக்டர் விவியன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
மலேசிய அமைச்சருக்கும் அவருடைய துணைவியாருக் கும் அமைச்சர் டாக்டர் விவி யன் நேற்று விருந்தளித்துச் சிறப்பித்தார். மலேசிய அமைச்சர், நேற்று சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரைச் சந்தித்தார்.
மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா (இடது) நேற்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை சந்தித்தார். படம்: ஃபேஸ்புக்/ விவியன் பாலகிருஷ்ணன்