MH370 அறிக்கையில் புதிய தகவல் இல்லை

புத்ராஜெயா: மலேசியாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 விமானம் என்ன ஆனது? அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாய் மறைந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அது பற்றிய புதிர் நீடிக்கவே செய்கிறது. விசாரணைக் குழுவினரின் அறிக்கையை எதிர்பார்த்து காத் திருந்த விமானப் பயணிகளின் குடும்பத்தினருக்கும் உறவினர் களுக்கும் எஞ்சியது ஏமாற்றமே. விசாரணைக் குழுவினர் நேற்று வெளியிடட இறுதி அறிக்கையில் புதிய கண்டுபிடிப்புகள் அல்லது புதிய தகவல்கள் எதுவும் இல்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத் தினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு கூறப்பட்ட தவறுகள் புதிய அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விதி முறைகள் பின்பற்றப்படவில்லை என்பதும் அதில் கூறப் பட்டுள் ளதாகவும் குடும் பத்தினர்கள் செய்தியாளர்களிடம் கூறினர். அதே தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடப்பதைத் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று தாங்கள் நம்புவ தாகவும் அந்த விமான விபத்தில் தன் தாயாரை இழந்த வழக்கறிஞர் ஒருவர் கூறினார். MH370 விமானம் மாயமாய் மறைந்ததற்கான உண்மையான காரணங்களை புலன்விசாரணைக் குழுவினரால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அக் குழுவின் தலைவர் கோக் சூ சோன் கூறியுள்ளார்.

அந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே விமானம் மாயமாய் மறைந்த தற்கான காரணங்களை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மொத்தம் 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட MH370 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடார் திரையிலிருந்து மாயமாய் மறைந்தது. பெய்ஜிங் நகருக்கு புறப்பட்ட அந்த விமானம் ஒருவேளை வேண்டுமென்றே திசை திருப்பி விடப்பட்டிருக்கலாம் என்று விசாரணைக் குழுவினர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். விமானம் திட்டமிடப்பட்ட வழியில் செல்லாமல் திசை திருப்பிவிடப் பட்டதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை விசாரணைக் குழுவினர் குறிப்பிடவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!