மூன்று ஆண்டுகளுக்கு முன்பை விட சிங்கப்பூரர்கள் தற்போது நகைச்சுவை, கேளிக்கை உணர்வு களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தேசிய பண்பு நெறிகள் மதிப்பீட்டு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மூன்றாவது முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டிலும் 2015ஆம் ஆண்டிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டபோது நகைச்சுவை, கேளிக்கை உணர்வுகள் முதல் பத்து இடங்களைப் பிடிக்க வில்லை. ஆய்வின் கண்டுபிடிப்புகள் கொள்கை ஆய்வுக் கழக வட்ட மேசைக் கலந்துரையாடலில் தெரி விக்கப்பட்டது.
மேலும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் புக்கிட் தீமா வளாகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்திலும் தெரி விக்கப்பட்டது. இந்த ஆய்வு கடந்த மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை நடத்தப்பட்டது. அதில் 2,000 சிங்கப்பூரர்கள் பங்கெடுத்தனர். கொடுக்கப்பட்ட பண்புநெறி கள், நம்பிக்கைகள், நடத்தைகள் பட்டியலிலிருந்து தம்மை நன்கு வர்ணிக்கும் 10 சொற்களை ஆய்வில் பங்கெடுத்தவர்கள் தேர்ந்தெடுத்தனர். நகைச்சுவை, கேளிக்கை உணர்வுகள் மட்டுமல்லாது சுகா தாரம், இரக்கம், நேர்மை, குடும்பம் போன்றவையும் அதிக மாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த ஆய்வை உள்ளூர் வர்த்தக ஆலோசனை நிறுவ னமான aAdvantage, பிரட்ட னைச் சேர்ந்த 'பேரட் வேல்யூஸ் சென்டர்' ஆகியவை இணைந்து நடத்தின.