மீண்டும் இணைந்த ‘மு.க.’ சகோதரர்கள்

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின், மு.க.அழ கிரி இடையே மீண்டும் உறவு மலர்ந்திருப்பதாக வெளியான தக வல் திமுகவினரிடையே அள வில்லா உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தந்தையின் உடல்நலனைக் கருதி சகோதரர்கள் இருவரும் சுமூகமாகப் பேசிக் கொள்வதாக வும், இருவரும் பழையபடி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அழகிரி, ஸ்டாலின் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. அதன் உச்சக் கட்ட மாக கட்சியை விட்டே அழகிரி நீக்கப்பட்டார். அதன் பின்னர் இருவரையும் இணைத்து வைக்க கருணாநிதி குடும்பத்தார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து இரு தினங்களுக்கு முன்பு சென்னை புறப்பட்டு வந்தார் அழகிரி.

"கருணாநிதியை வீட்டிலேயே வைத்திருந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் விருப்பம். ஆனால் எந்த வகையி லும் தந்தையின் உடல்நலம் மோச மடைந்து விடக்கூடாது என்பது அழகிரியின் எண்ணம். அதனால் உடல்நலம் குன்றியுள்ள தந்தைக்கு இதற்கு மேலும் வீட்டில் வைத்து சிகிச்சை அளிப்பது சரியல்ல என்று ஸ்டாலினிடம் மிகக் கண் டிப்புடன் அழகிரி கூறியதாகத் தெரிகிறது.

"என்ன செய்வது எனத் தெரி யாது குழப்பத்தில் இருந்த ஸ்டா லின் தன் அண்ணன் கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டு கரு ணாநிதியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இருவரும் இப்போது சகஜமாகப் பேசிக் கொள்கின்றனர்," என்று தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி குடும்பத் தார் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது அழ கிரி, ஸ்டாலினுக்கு இடையேயான பிரச்சினை குறித்து பேசப்பட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து சகோதரர் கள் இருவரும் பழைய மனக்கசப்பு களை மறந்து மனம்விட்டுப் பேசி உள்ளதாக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. இது திமுகவினரை மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

"கருணாநிதி உடல்நலம் தேறி மீண்டும் கோபாலபுரம் இல்லம் வரும் போது அழகிரியும் ஸ்டாலி னும் இணைந்து அவரை வரவேற் கும் காட்சியை திமுகவினர் காணக்கூடும். இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் கருணாநிதிக்கும் மிகப் பெரும் தெம்பையும் மகிழ்ச்சி யையும் அளிக்கும்," என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!