வைதேகி ஆறுமுகம்
இந்த ஆண்டு 7ஆவது முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் பூந்தோட்டத் திருவிழா வில் பலவகையான உள்ளூர், வெளிநாட்டுத் தாவரங்களைக் கொண்ட 70க்கும் மேற்பட்ட காட்சிப் பொருட்களை மக்கள் கண்டு மகிழலாம். கரையோரப் பூந்தோட்டங் களில் கிட்டத்தட்ட 10.1 ஹெக்டர் பரப்பளவில் காட்சி இடம் பெற்றுள்ளது.
'வண்ணங்கள் நிறைந்த உலகம்' எனும் கருப்பொருளைக் கொண்டுள்ள இவ்வாண்டின் விழா வெப்பமண்டலப் பகுதி யில் உள்ள தாவரங்களை பிரதி பலிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தரும் மக்களின் கண்களுக்குக் குளிர்ச்சியான வகையில் பல வண்ணமயமான மலர்களும் தாவரங்களும் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. இவ்விழாவை மேலும் சுவார சியமாக்கும் முறையில் சிங்கப் பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூகத் தோட்டங்கள் மூலம் ஒன்றிணைந்த குடியிருப்பாளர் களும் இந்த விழாவில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
தோட்டக்காரர் கிண்ணம் எனும் போட்டிக்காக 200க்கு மேற்பட்ட சமூகத் தோட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்து 8 மாத காலமாக அழகிய தோட்டங்களை அமைத் துள்ளனர். இதில் பங்கேற்றவர்களில் வட மேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தைச் சேர்ந்த 57 வயது திருமதி லலிதா நாயரும் ஒருவர்.
தோட்டக்காரர் கிண்ணப் போட்டியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சிறந்த தோட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் தோட்டம். படங்கள்: தேசிய பூங்காக் கழகம்