ஊழியர்களுக்கு உதவ ஐந்து துறைகளில் தொழிலாளர் இயக்கம் கவனம் செலுத்தவிருக் கிறது. சிறந்த சம்பளமும் இவற் றில் ஒன்று என்று நேற்று பேசிய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைவரான இங் சீ மெங் தெரி வித்தார். என்டியுசியின் தலைமை செயலாளர் என்ற பொறுப்பில் முதல் முறையாக அவர் தமது தேசிய நாள் செய்தியை வெளி யிட்டார். இவ்வாண்டு சிங்கப்பூரின் வளர்ச்சி நிலையாக இருந்து வருவதை சுட்டிக்காட்டிய திரு இங் சீ மெங், நமது வெற்றியின் முக்கிய கூறு ஊழியர்கள் என்று வருணித்தார்.
மேலும் என்டியுசி கவனம் செலுத்த வேண்டிய ஐந்து துறை களையும் அவர் பட்டியலிட்டார். ஊழியர்கள் நல்ல சம்பளம் பெற உதவுவது அவற்றில் ஒன்று. ஊழியர் நலன், சிறந்த வேலை எதிர்காலம் ஆகியவை இதர துறைகளாகும். மூத்த ஊழியர்கள் மற்றொரு துறை என்று குறிப்பிட்ட அவர், 62ஆக இருக்கும் ஓய்வு வயதை என்டி யுசி ஆராய்ந்துவருகிறது என்றார். என்டியுசி சமூக நிறு வனங்கள் மூலம் ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கு உதவுவது 5வது துறை என்று திரு இங் சொன்னார்.