'சேஜ்' எனும் சமூக சேவை நிறுவனம், கடந்த இருபது ஆண்டுகளாக முதியோர்கள் மற்றும் அவர்களுடைய அன்புக் குரியவர்களின் பிரச்சினைகளை அக்கறையுடன் செவிமடுத்து தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறது. முதியோர்களும் தங்க ளுடைய உடல்நிலை, மனநிலை, தனிமை, குடும்ப உறுப்பினர் களுடனான உறவில் உள்ள சவால்களை அதனுடன் பகிர்ந்து வருகின்றனர். முதியோர்கள் தொடர்பு கொள்ள நேரடி தொலைபேசி வசதிகளையும் 'சேஜ்' செய்துள் ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி யில் சிங்கப்பூர் பிரஸ் ஹோல் டிங்சும் அதன் அறநிறுவனமான எஸ்பிஎச் ஃபவுண்டேஷனும் 'சேஜ்' உட்பட இருபது சமூக சேவை நிறுவனங்களுக்கு 350,000 வெள்ளி நன்கொடை வழங்கியது.
இதில் சேஜ்ஜுக்கு மட்டும் 10,000 வெள்ளி வழங்கப்பட்டது. சேஜ் ஆலோசனை நிலையத் தின் நிர்வாக இயக்குநரான வோங் லிட் ஷூன், அதிக மானவர்களுக்கு உதவ மேலும் வளங்களைப் பெறுவதற்கு இந் நிதி உதவும் என்று தெரிவித்தார்.
எஸ்பிஎச் தலைவர் டாக்டர் லீ பூன் யாங்கிடமிருந்து காசோலையை பெறும் சமூக உண்டியலின் உதவி தலைவர் எரிக் ஆங். படம்: லியான்ஹ சாவ்பாவ்