இந்தியா-இங்கிலாந்து மோதல்

பர்மிங்காம்: விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக் கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை இந்தியா 2=1 எனும் கணக்கிலும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2=1 எனும் கணக்கிலும் கைப்பற்றின. இந்தியா=இங்கிலாந்து அணி கள் இடையே 5 டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெறுமா என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கி றார்கள். களமிறங்கும் 11 வீரர்களைத் தேர்ந்தெடுப்பது கோஹ்லிக்குக் கடும் சவாலாக இருக்கும். தவான், புஜாரா அண்மையில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாமல் இருக்கின்றனர். இதனால் இந்தியாவில் பந்தடிப்பில் இது பாதிப்பை ஏற்படுத்தும். கோஹ்லி, முரளிவிஜய், ரகானே, ராகுல் ஆகியோரது பந்தடிப்பைப் பொறுத்து அணியின் நிலை இருக்கிறது.

தொடக்க வீரர் வரிசையில் இருந்து தவான் கழற்றிவிடப் படலாம். முரளி விஜய்யும், ராகுலும் தொடக்க வீரர்களாக ஆடலாம். இதேபோல விக்கெட்காப்பாளர் களில் தினேஷ் கார்த்திக், ரிசப் பாண்ட் ஆகியோரில் ஒருவர் இடம்பெறலாம். தினேஷ் கார்த்திக் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடினார். மேலும் அனுபவம் வாய்ந்தவர். இதனால் அவருக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிகிறது. வேகப்பந்து வீரர் புவனேஸ்வர் குமார் ஆடாதது பாதிப்பே. மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உடல் தகுதியுடன் இல்லை. இதனால் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் இடம்பெறுவார்கள்.

சுழற்பந்து வீரரைத் தேர்ந் தெடுப்பதும் எளிதல்ல. அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரில் இருவர் இடம் பெறுவார்கள். குல்தீப்யாதவ் இங்கிலாந்து பந்தடிப்பாளர் களுக்குச் சவாலாக இருப்பார் என்பதால் அவர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஜடேஜா நீக்கப்படலாம். இந்திய பந்தடிப்பாளர்களுக்கு இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் நெருக்கடி கொடுக்க லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!