தெம்பனிசில் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டு மாண்டு போனார். தெம்பனிஸ் அவென்யூ 9க்குச் செல்லும் வழியில் தெம்பனிஸ் அவென்யூ 2ல் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து நேற்று முன்தினம் காலை 9.09 மணிக்கு போலி சாருக்கு தகவல் கிடைத்தது. புளோக் 208க்கு அருகில் விபத்து நடந்த இடத்துக்கு அவசர மருத்துவ உதவி வாகனத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அனுப்பிவைத்தது. சுயநினை வற்ற நிலையில் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் மாண்டு போனார். விபத்தை நேரில் கண்ட ஒருவர் சீன நாளிதழான லியன்ஹ வான்பாவ்விடம் இந்தத் தகவல் களைக் கூறினார். விபத்தில் சிக்கிய ஆடவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.
தெம்பனிஸ் அவென்யூ 2ல் இருக்கும் புளோக் 208க்கு அருகில் விபத்து நேர்ந்தது. படம்: வாசகர்