கோவை: தலைமறைவாக இருந்து வந்த தனியார் விடுதிக் காப்பாளர் புனிதா போலிசாரிடம் சரண டைந்தார். மாணவிகளைத் தவறான வழி யில் செல்லுமாறு கட்டாயப் படுத்தினார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. கோவை பீளமேடு பகுதியில் இயங்கி வரும் மகளிர் விடுதியில் இவர் காப்பாளராகப் பணியாற்றி வந்தார்.
அங்கு தனியார் கல்லூரி மாணவிகளும், தனியார் நிறுவனங் களில் வேலை பார்க்கும் பெண் களும் அதிகளவில் தங்கி உள்ள னர். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவிகள் சில பேரிடம் பேசிய புனிதா, விடுதிக் காப்பாளர் மற்றும் சிலரி டம் உல்லாசமாக இருந்தால் ஆதா யமடையலாம் என்று ஆசை வார்த் தைகள் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மாணவிகள் தங்கள் பெற்றோ ரிடம் விவரம் தெரிவிக்க, இவ்விஷ யம் போலிசாரிடம் சென்றது. இதையடுத்து புனிதாவும் விடுதி உரிமையாளர் ஜெகநாதனும் தலைமறைவாகினர்.
இதையடுத்து இருவரும் போலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் அண்மையில் ஜெகநா தன் மர்மமான முறையில் இறந்தார். புனிதாவைப் போலிசார் தொடர்ந்து தேடி வந்தனர். அவரைத் தேடி தனிப்படை போலிசார் பெங்களூரு, மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் திடீர் திருப்பமாக கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் புனிதா.