கிருஷ்ணகிரி: மாட்டு வண்டித் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு நிலவியது. லாரிகளுக்கு என தனியாக மணல் குவாரிகள் இருப்பது போல் மாட்டு வண்டிகளுக்கும் தனி மணல் குவாரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கையை வலி யுறுத்தி கடந்த 4 மாதங்களாக கடலூரைச் சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்களும் தொழிலாளர் களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். எனினும் மாவட்ட நிர்வாகமும் அரசும் இந்தக் கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளை மாவட்ட நிர்வாகத்தி டம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் போராட்டம் தொடங்கி யது.
கடலூர் மாவட்டத்தில் இருக் கும் சுமார் 600 மாட்டு வண்டிகள் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடி, தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"எங்களுக்கென தனி மணல் குவாரிகள் அமைக்க வேண்டும். மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மீது திருட்டு மணல் வழக்குப் பதிவு செய்வதை காவல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும்," என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.