சென்னை: கணினி நிறுவன உரிமையாளர் காருடன் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் சென்னை யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. எனினும் பொதுமக்களின் உதவியோடு கடத்தல்காரர்களைப் போலிசார் கைது செய்தனர். கொளத்தூரைச் சேர்ந்த 38 வயதான பிரமோத் என்பவர் அண்ணா நகரில் கணினி நிறுவ னம் நடத்தி வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை இரவு தன் நிறு வனத்தில் இருந்து வீட்டிற்குப் புறப்பட்ட பிரமோத், தனது காரில் ஏற முயன்றபோது 4 பேர் கொண்ட கும்பல் அவரைச் சர மாரியாகத் தாக்கியது. பின்னர் அவரது கை கால் களைக் கட்டி, வாயில் துணியை வைத்துக் காரின் பின் இருக் கையில் கிடத்திக் காரோடு அவ ரைக் கடத்திச் சென்றனர்.
அம்பத்தூர் பகுதியை நெருங் கியபோது சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது லேசாக மோதியது அந்தக் கார். இதையடுத்து இரு சக்கர வாகனமோட்டிக்கும் கடத் தல்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர்.
இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்ட பிரமோத் தனது காலால் காரின் கண்ணாடி யையும் கதவையும் பலமாக உதைத்துள்ளார். இதனால் கார் குலுங்கவே அங்கு கூடிய பொது மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களில் சிலர் காருக்குள் எட்டிப் பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் பிர மோத் போராடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கடத்தல்காரர் களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்ப, பதிலளிக்க முடியாமல் நால்வரும் தப்பியோடினர். எனினும் அவர்களை விடாத பொதுமக்கள் நீண்ட தூரம் விரட்டிச் சென்றனர். அப்போது நால்வரில் ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். இதையடுத்து பிரமோத்தை மீட்ட பொதுமக்கள் தங்களிடம் சிக்கிய கடத்தல்காரர் ஜானகிராமனைப் போலிசில் ஒப்ப டைத்தனர்.