டெக்சாஸ்: ஸ்பானிய முன்னணி காற்பந்துக் குழுவான பார்சி லோனா, இத்தாலியின் ரோமா குழுவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அனைத்துலக காற்பந்துக் கிண்ணப் போட்டித் தொடரில் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் இக்குழுக்கள் நேற்று மோதின. ரோமா தனது முதல் கோலைப் போடும் வரை லா லீகா வெற்றி யாளரான பார்சிலோனா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந் தது. பார்சிலோனாவின் ரஃபின்ஹா 6வது நிமிடத்திலேயே முதல் கோலைப் போட்டார். அதன் °பிறகு, அக்குழுவின் புதிய வீரர் மால்கோம் பார்சிலோனா குழுவிற்காக தனது முதல் கோலைப் போட்டார்.
ஆனால் அதுவே அன்றைய ஆட்டத்தில் பார்சிலோனாவின் கடைசி கோலாகவும் அமைந்தது. இதற்கிடையே ரோமாவும் முதல் கோலைப் போட்டது.
78வது நிமிடத்தில் இரண்டா வது கோலைப் போட்டு ஆட்டத்தை சமன் செய்ததோடு மட்டுமல்லாமல், ரோமா வீரர்கள் தொடர்ந்து கோல் மழை பொழியத் தொடங்கினர். பெனால்டி வாய்ப்பு உட்பட அடுத்தடுத்து இரண்டு கோல்கள் விழ பார்சிலோனா 4=2 என அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. போர்டியக்ஸ் குழுவின் முன் னாள் வீரரான மால்கோமை வாங் குவதில் இக்குழுக்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதி யில் பார்சிலோனா தான் மால் கோமை வாங்கியது. மியாமியில் நடந்த இத்தொட ரின் இன்னோர் போட்டியில் ரியால் மட்ரிட் குழுவை 2=1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மான்செஸ் டர் யுனைடெட். மற்றோர் ஆட்டத்தில் ஒரு கோல் வித்தியாசத்தில் டோட்டன் ஹம் ஹாட்ஸ்பர் குழுவிடம் வீழ்ந் தது இன்டர்மிலன்.