பர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் பூவா தலையா வில் வென்று பந்தடிப்பைத் தேர்வு செய்தார். இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகு லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஜடேஜா மற்றும் புஜாரா அணியில் இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஹார்திக் பாண்டியா, ஷமி உள்ளிட்ட 4 வேக பந்துவீச்சாளர் கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச் சாளருடன் (அஸ்வின்) களமிறங் கியுள்ளது. நேற்றைய முதல் நாள் ஆட் டத்தில் உணவு இடைவேளை வரை 28 ஓவர்களை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்கள் எடுத் திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரூட், குக் விளையாடினர்.
அஸ்வினின் சுழலில் சிக்கிய குக் 13 ஓட்டங்களுக்கு ஆட் டமிழந்தார். அதன் பின் சேர்ந்த ஜென்னிங்ஸ்-ரூட் இணை சீராக ஓட்டங்களைச் சேர்த்தது. டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி அந்த இடத்தைத் தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 1-3 என்ற கணக் கில் படுதோல்வி அடைந்தது. இதற்கிடையே, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியா கைப் பற்றும் வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், "இந்தத் தொடரின் முக்கியம்சமே சூழ்நிலைக்கு ஏற்ற படி விரைவாக எப்படி மாறிக் கொள்கிறோம் என்பதுதான். "கடந்த 2007ஆம் ஆண்டு நாங்கள் இங்கிலாந்துத் தொடரைக் கைப்பற்றியபோது, அது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தது. "ஆனால் தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் என் பதால் கொஞ்சம் நேரம் கிடைக் கும். எனவே, இந்தத் தொடரில் இந்தியா 2=1 என வெல்லும் வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது.
"இந்திய அணி நல்ல ஓட்டங் கள் எடுப்போம் என்பதில் சந்தேகமில்லை. "ஆனால், பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியம். "விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டுமென்றால், பந்து வீச்சாளர் கள் சிறந்த உடற்தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். "இந்திய அணி இளம் பந்து வீச்சாளர்களைக் கொண்டிருந்தாலும் 6 வாரத்தில் ஐந்து டெஸ்ட் விளையாட வேண்டியுள்ளது என் பது சற்று கடினமானது," என்றார்.