உலகக் கிண்ண ஹாக்கி: காலிறுதியில் இந்தியா

லண்டன்: மகளிர் உலகக் கிண்ண ஹாக்கி தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. லண்டனில் நடைபெற்று இப் போட்டித் தொடரில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முத லிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும். இந்நிலையில், காலிறுதிக்குத் தகுதி பெற வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நேற்று இத்தாலியை எதிர்த்துக் களமிறங்கியது. நெருக்கடி நிறைந்த இந்த ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை லால்ரேம் சியாமி முதல் கோலைப் போட் டார்.

இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நேகா கோயல் இரண் டாவது கோலையும் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் வந்தனா கட் டாரியா 3வது கோலையும் அடித்து அசத்தினர். இறுதி வரை போராடிய இத் தாலி வீராங்கனைகளால் கோல் எதுவும் அடிக்க முடியாததால் 3-0 என அவர்களை வீழ்த்திய இந்திய மகளிர் அணி உலகக் கிண்ண ஹாக்கி தொடரின் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. முன்னதாக, இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் வெற்றியாளர் இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலை கண்டது. 2வது ஆட்டத்தில் அயர்லாந்து டன் 0=1 என்ற கணக்கில் தோல் வியைத் தழுவியது. கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடனான போட்டியில் 1-1 என சமநிலைப் பெற்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!