மணிலா: பிலிப்பீன்சின் தெற்குப் பகுதியில் உள்ள பாசிலான் நகரில் செவ்வாய்க்கிழமை குண்டு வெடித்ததில் 11 பேர் உயிர் இழந்ததையடுத்து நாடு மழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் சாலை முனையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். பாசிலான் நகரில் உள்ள ஒரு சோதனைச் சாவடிக்கு அருகே ஒரு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் உயிர் இழந்தனர்.
ஒரு குழந்தை உட்பட பலர் காயம் அடைந்தனர். அந்தக் குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு அபு சயேப் குழுவே காரணம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிலிப்பீன்ஸ் உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.