யங்கூன்: மியன்மாரின் தென் கிழக்குப் பகுதிகள் மோசமான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி வீடுகளைவிட்டு வெளி யேறியவர்களின் எண்ணிக்கை 150,000 ஆக உயர்ந்துள்ளது என்று பேரிடர் நிவாரணக்குழு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மியன்மாரில் கடந்த பல நாட்களாகப் பெய்து வரும் கன மழையிலும் வெள்ளப் பெருக்கிலும் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் இன்னும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று கிராம மக்கள் அச்சம் அடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வெள்ளநீர் சூழ்ந்த கிராமங் களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே இந்த முகாம்களில் அதிகமானோர் தங்க வைக்கப் பட்டுள்ள நிலையில் இவர்களுடன் இன்னும் பலர் தங்க வேண்டிய சூழல் வரும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப்பொருட்களை விநி யோகிப்பதில் அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒரு சில இடங்களில் இன்னும் பலர் உதவியை எதிர்பார்த்து காத் திருப்பதாகவும் அந்த இடங் களுக்கு செல்ல மீட்புக் குழுவினர் சிரமப்படுவதாகவும் தெரிகிறது.