ஹராரே: ஸிம்பாப்வேயில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சி அதிக நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு தேர்தல் தொடர்பான வன்முறைகள் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை என்று முக்கிய எதிர்க்கட்சிகள் கூறி வரும் வேளையில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஸிம்பாப்வேயில் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம் பவங்கள் அதிகரித்துள்ளதால் ஐநாவும் பிரிட்டனும் கவலை தெரிவித்துள்ளன. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சி ஆதரவாளர் களை ஒடுக்க போலிசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஸிம்பாப்வே அரசியல் வாதிகள் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் அன் டோனியோ கட்டரசும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.