வேலை தேடுவோருக்கு கூகல் நிறுவனம் இணையம்வழி ஒரு புது வேலை தேடும் வசதியைத் தொடங்கியுள்ளது. வேலை வாய்ப்புகள் தொடர்பான பட்டியல், 1,500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு இணையத் தளங்களிலிருந்து பெறப்பட்டது. வேலை பொறுப்புகள், திறன்கள் குறித்துத் தேடுவோருக்கு உடனே அவை தொடர்பான வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும். பின், வேலை தொடர்பாக முதன்முதலில் விளம்பரம் செய்த இணையத்தளத்தின்வழி அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
சிங்கப்பூரர்கள் இணையம் வாயிலாக வேலை தேடுவதால் அதன் தேவை இருந்து வருவ தாலும் கடந்த ஓர் ஆண்டில் பலர் தங்கள் கைபேசிவழி வேலைகள் தேடுகிறார்கள் என்றும் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் திருவாட்டி ஜோய் சி கூறினார். இந்த வேலை தேடும் இணைய வசதி அமெரிக்காவில் சென்ற ஆண்டு அறிமுகம் கண்டது. தென்கிழக்காசிய நாடுகளில் சிங்கப்பூரில்தான் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.