பொதுமக்கள் நீடித்து நிலைக்கக் கூடிய கட்டடங்களின் முக்கியத் துவத்தை அறிந்துகொள்ள சிங்கப்பூர் பசுமைக் கட்டட மன்றம் நேற்று 'Live.Work.Play. Green' என்ற இரு மாத இயக்கத்தைத் தொடக்கி வைத்தது. மெல்பர்ன் நகருக்கு இரண்டு பேர் சென்று வர இலவசப் பயணம், மரினா பே சேண்ட்ஸ், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா விடுதிகளில் தங்குவது போன்ற கவர்ச்சியான பரிசுகளை வெல்லப் பொதுமக்கள் முதலில் இணையம் வாயிலாகப் புதிர்க் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
இப்புதிர்வழி சிங்கப்பூரர்கள் நாட்டில் இருக்கக்கூடிய நீடித்து நிலைக் கத்தக்க கட்டமைப்புகளைப் பற்றி உற்சாகமூட்டும் முறையில் கற் றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். பசுமைக் கட்டடங்களின் மதிப்பைப் பற்றியும் அவை எந்த அளவுக்கு நம் சுற்றுச்சூழல்மீது தாக்கம் கொண்டுள்ளன என்றும் அறியாதோர் ஆர்வத்தைச் சுண்டி இழுக்க மன்றம் இவ்வியக்கத்தை துவக்கியுள்ளது.
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திப் பசுமைக் கட்டடங்களின் மதிப்பை அறிவதோடு அவை கரிபொருள் வெளியேற்றத்தைக் குறைக்க எவ்வாறு பங்கு வகிக்கின்றன என்பதற்கு இவ்வியக்கம் ஒரு நல்ல முயற்சி என்று தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.