சென்னை: 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட குட்கா போதைப் பொருட்களைப் போலிசார் பறிமுதல் செய்தனர். சென்னையை அடுத்துள்ள தாழம்பூரில் உள்ள கிடங்கு ஒன்றில் குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்துப் போலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அடையாறு பகுதி யில் இயங்கிவரும் தேநீர் கடைக்கு சிகரெட்டுகளை விநியோ கித்து வந்த மஞ்சுநாதன் என்பவர் மீது போலிசாருக்குச் சந்தே கம் எழுந்தது. நேற்று முன்தினம் அவர் சிகரெட் பாக்கெட்டு களைக் கொண்டுவரும் வாகனத்தைப் போலிசார் சோதனையிட்ட னர். அப்போது சிகரெட்டுகளுக்கு மத்தியில் குட்கா பொருட்க ளும் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வடிவழகன் என்பவரிடமிருந்து குட்கா பொருட் களை வாங்கியதாகத் தெரிவித்தார்.
வடிவழகனிடம் நடத்தப் பட்ட விசாரணையின்போது தாழம்பூர் கிடங்கில் குட்கா பொருட் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அந்தக் கிடங்கில் போலிசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர். அப்போது 69 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட் டிருந்த குட்கா பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பில் இதுவரை மூவர் கைதாகியுள்ளனர்.