மனிலா: அமெரிக்க நீச்சல் சகாப் தம் மைக்கல் ஃபெல்ப்ஸ் 1995ஆம் ஆண்டில் 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் நிகழ்த்திய சாதனையை இப்போது பிலிப் பீன்சில் பிறந்த 10 வயது சிறுவன் கிளார்க் கெண்ட் அபுவாடா முறி யடித்துள்ளான். "சூப்பர்மேன்" என்று அழைக் கப்படும் இந்தச் சிறுவன், கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டி ஒன்றில் இந்த அரிய சாதனையை நிகழ்த்தினான். ஆண்களுக்கான 10 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் பங்கேற்ற இவன், அப்போது பதிவான 1:10:48 சாதனையை முறியடித்தான். இவன் 1:09:38 எனும் நேரத்தில் புதிய சாதனையைப் படைத்தான். அதாவது, ஃபெல்ப்சைவிட ஒரு வினாடி குறைவான நேரத்தில் போட்டியை முடித்தான் அபுவாடா. கடந்த 1995ஆம் ஆண்டில் இந்தப் பிரிவில் ஃபெல்ப்ஸ் படைத்த சாத னையை இதுவரை எவரும் முறி யடித் ததில்லை.
தற்போது கலிஃபோர்னியாவில் வசித்து வரும் அபுவாடா, மூன்று வயதிலேயே நீச்சல் கற்றுக்கொண் டான். ஏழு வயதில் நீச்சல் போட்டி களில் கலந்து கொள்ள தொடங்கிய இவனிடம் ஏழு தங்கப் பதக்கங் கள் கை வசம் உள்ளன. ஃபெல்ப்சின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே இவனது கனவு.