‘கும்கி 2’ல் நாயகியானார் நிவேதா

'கும்கி' இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபுசாலமன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'கும்கி' தமிழ் சினிமாவின் தரமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்போது யானையை மட்டுமே தொடர்புபடுத்தி, வேறு நடிகர்கள், வேறு கதைக்களத்துடன் 'கும்கி'யின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் பிரபு சாலமன். இதற்காக நாயகியை முன்னிலைப்படுத்தித் திரைக்கதை அமைத்துள்ளாராம். இதையடுத்து நிவேதா பெத்துராஜிடம் கதை சொல்லியிருக்கிறார். கதை கேட்டது முதல் இந்தப் படத்தில் நடித்தே ஆகவேண்டும் என்று உறுதியாக உள்ளாராம் நிவேதா. நாயகியையும் யானையையும் மையமாக வைத்து நகரும் கதை என்பதால் நிவேதாவிடம் மொத்தமாக 70 நாட்கள் கால்‌ஷீட் கேட்டுள்ளாராம் பிரபுசாலமன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!