சீனா-ஆசியான் முதலாவது கடற்பயிற்சி

சீனாவும் ஆசியானின் 10 நாடு களும் சாங்கி கடற்படைத் தளத்தில் ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா கப்பலில் வியாழக்கிழமை தங்களு டைய முதலாவது ஆசியான்-சீனா கடற்படை பயிற்சியை நடத்தின. இந்த 11 நாடுகளின் கடற்படை களும் கலந்துகொள்ளும் களப் பயிற்சியை சீனாவில் நடத்த இரு தரப்புகளும் திட்டமிட்டுள்ளன. சாங்கி கடற்படைத் தளத்தில் நடந்த இரண்டு நாள் இணையப் போர் பயிற்சியில் உண்மையான களப் பயிற்சிகள் இடம்பெறவில்லை. இந்த இணையப் போர் பயிற்சியை சிங்கப்பூர் கடற்படை நடத்தியது.

அனைத்துலகக் கடற்பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மோதிக் கொள்வது, எண்ணெய்க் கப்பல் களில் தீப்பிடிப்பது போன்ற சம்ப வங்கள் நிகழும்போது எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறை கள் தொடர்பில் பயிற்சியில் கலந்துகொண்ட நாடுகள் ஒத்து ழைத்தன. சீனா, சிங்கப்பூர் இரு நாடு களும் இணைந்து தலைமை தாங்கி ஆசியான்-சீனா கடற் துறை களப்பயிற்சி என்ற பயிற் சியை அக்டோபர் மாதம் நடத்தும்.

சாங்கி கடற்படைத் தளத்தில் 'ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா'வில் சிங்கப்பூர் குடியரசு கடற்படை ஏற்று நடத்திய இரண்டு நாள் ஆசியான்-சீனா இணையப் போர் பயிற்சி நேற்று முடிவடைந்தது. படம்: வான் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!