சாங்கி விமான நிலையம் போட்டி யாளர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற முன்னோக்கிய திட்டமி டலும் வருங்காலத் தேவைக்கேற்ற கட்டட அம்சமும் அவசியம் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்துள்ளார். சாங்கி விமான நிலையத்தின் நான் காம் முனையத்தின் அதிகாரபூர்வத் திறப்பு விழாவில் பங்கேற்ற திரு கோ, "வருங்காலத் தேவைக்கேற்ற கட்ட டத்தை எழுப்ப திடமான முடிவு அவசி யமாகிறது. ஏதோ கட்டினோம், பயணி கள் வந்தார்கள் என்ற போக்கில் அது இருக்கலாகாது," என்றார்.
"விமானப் போக்குவரத்துத் துறை என்பது கணிக்க முடியாத ஒன்று. ஏராளமான இடையூறுகளைச் சந் திக்கக் கூடியது அது. எண்ணெய் விலைகளின் மாற்றம், அரசாங்கங் களின் தேவையற்ற தலையீடுகள் போன்றவற்றையும் அத்துறை சமாளிக்க வேண்டி உள்ளது. "ஒரே மாதிரியான திட்டமிடல்கள் தோல்வியில் முடியக்கூடும். எனவே இடையூறுகள் ஏற்படும் சூழல்களைச் சந்திக்கத் தயாராவதோடு தேவை எழும் போது சரியான நேரத்தில் உத்திபூர்வ மாற்றங்களை உடனடியாக வகுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்," என்றார் திரு கோ. அதிகரித்து வரும் விமானப் பயணி களின் எண்ணிக்கையைச் சமாளிக்க சாங்கி குழுமம் வகுத்திருக்கும் திட் டங்களில் நான்காவது முனையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனைக் கட்டி எழுப்ப நான்காண்டுகள் ஆயின.
புதிய நான்காவது முனையத்தில் கயிறுகளாலும் வலைகளாலும் உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடலை பயணிகள் இன்னும் சில வாரங்களில் பயன்படுத்தலாம். 'சேண்ட்லியர்' எனப்படும் இந்த விளையாட்டுக்கூடம் விமான நிலையத்தின் தரையையும் கூரையின் உட்புறத்தையும் இணைக்கும். சுமார் 10 கிலோ மீட்டர் நீளமுள்ள கயிற்றையும் சுமார் 15 டன் எடையுள்ள உலோகங்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுத் திடலில் ஒரே நேரத்தில் குழந்தைகளும் பெரியவர்களுமாக 50 பேர் விளையாடலாம். போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் அதிகாரிகளும் கயிற்றுப் பாதையில் ஏறி அதன் சிறப்புகளைக் கண்டறிந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்