பூன் லே அடகுக்கடை கொள்ளை முயற்சி: முன்னாள் கட்டுமான ஊழியர் மீது குற்றச்சாட்டு

பூன் லே எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே இருக்கும் அடகுக்கடை ஒன்றில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கட்டுமான ஊழியர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஷேக் முகம்மது ரசான், 29, என்ற அந்த ஆடவர், கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறும் குற்றச்சாட் டையும் துப்பாக்கி போன்ற ஒரு பொருளை வைத்துக்கொண்டு அந்தக் குற்றச்செயலை செய்த தாகக் கூறும் வேறு ஒரு குற்றச் சாட்டையும் எதிர்நோக்குகிறார்.

வேல்யூமேக்ஸ் என்ற அடகுக் கடையில், ஜூலை 28ஆம் தேதி பிற்பகல் 4.33 மணிக்கு ஒரு கருப்புநிற பொருளையும் கத்தியை யும் காட்டி அந்த நபர் அந்தக் கடையில் கொள்ளையடிக்க முயன்றார் என்று நீதிமன்றப் பத்திரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சம்பவம் நிகழ்ந்த அன்று தான் குடித்திருந் ததாக, மத்திய போலிஸ் பிரிவில் இருந்தபடி காணொளித் தொடர்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலை யான ரசான், மாவட்ட நீதிபதி கிறிஸ்தஃபர் கோவிடம் தெரிவித் தார். மொழிபெயர்ப்பாளர் மூலம் பேசிய அவர், "நான் கத்தியையோ துப்பாக்கியையோ காட்டவில்லை. ஒரு குண்டைப் போன்றுதான் அவற்றைக் காட்டினேன்," என்று ரசான் கூறினார். கொள்ளை முயற்சி சம்பவம் நிகழ்ந்து ஐந்து நாள் கழித்து, கம்போங் கிளாம் பகுதியில் இருக்கும் மஸ்கட் ஸ்திரீட்டில் ரசான் கைதானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!