கோலாலம்பூர்: சிலாங்கூரில் ஸ்ரீ செத்யா தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அம்னோ கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் உதவித் தலைவர் முகமட் ஹசான் கூறியுள்ளார். அத்தொகுதியில் போட்டி யிடும் பாஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்கும் வகையில் அத்தொகுதி இடைத்தேர்தலில் அம்னோ அல்லது தேசிய முன்னணி போட்டியிடாது என்று அவர் அறிவித்தார். பாஸ் கட்சிக்கும் அம்னோ கட்சிக்கும் இடையே புரிந்துணர்வு தொடங்கி யிருப்பதற்கான அறிகுறியாக இது கருதப்படுகிறது என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் அம்னோ கட்சியும் பாஸ் கட்சியும் அரசியல் எதிரிகளாக இருந்து வந்தன. எதிர்க்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுவந்த பாஸ் கட்சி பொதுத் தேதேர்தலுக்கு முன்னதாகவே அக் கூட்டணியிலிருந்து விலகியது. இந்நிலையில் தேசிய முன்னணி கூட்டணியில் பாஸ் கட்சி சேரக்கூடும் என்ற யூகம் நிலவும் வேளையில் பாஸ் கட்சியும் அம்னோவும் விட்டுக் கொடுத்துப் போவதாகக் கூறப்படுகிறது.