4 மில்லியன் பேருக்கு மலேசியா பண உதவி

கோலாலம்பூர்: மலேசிய அரசாங் கம் நான்கு மில்லியன் பேருக்கு இம்மாதம் 15ஆம் தேதி ரொக்கப் பணம் வழங்கவிருப்பதாக மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவும் வகையில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மலேசிய அரசாங்கம் பண உதவி வழங்கி வருகிறது. மக்களுக்கு நிதி உதவி வழங்கும் உதவித் திட்டத்தை 1மலேசியா திட்டம் என்று முந்தைய அரசாங்கம் அறிவித் திருந்தது. தற்போது அந்த உதவித் திட்டம் வாழ்க்கைச் செலவுக்கான உதவித் திட்டம் என்று புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மூன்றாவது முறையாக மக்களுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படவுள்ளது. மக்களுக்கு இத்தகைய பண உதவி வழங்கப்படுவதால் அரசாங்கத்திற்கு 1.6 பில்லியன் ரிங்கிட் (392 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும் என்று திரு லிம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் மலேசியாவுக்கு 1 டிரில்லியன் ரிங்கிட் கடன் இருப்பதால் அதை கருத்தில் கொண்டு வரம்புக்கு உட்பட்டு அந்த உதவித் தொகை வழங்கப் படுவதாகவும் அவர் சொன்னார். நோன்புப் பெருநாள் நெருங்கும் வேளையில் தேவையான பொருட்கள் வாங்குவதற்கு அந்த ரொக்கப்பணம் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறி னார். மலேசியாவில் ஜிஎஸ்டி எனும் பொருள் சேவை வரி நீக்கப் பட்டதால் மலேசியா நொடித்துப் போகவில்லை என்று திரு லிம் கூறினார். மக்களுக்கு தொடர்ந்து தங்களால் உதவித் தொகை வழங்க முடிகிறது என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!