எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்தில் 149 ஓட்டங்கள் எடுத்தாலும் அடிலெய்ட் சதத்தைத் தன்னால் மறக்க முடி யாது என்று கூறியுள்ளார் கோஹ்லி. ஊடகம் ஒன்றிற்கு கோஹ்லி அளித்த பேட்டியில், "என்னைப் பொறுத்தவரை எட்ஜ் பாஸ்டனில் நான் இப்போது அடித்த சதம் எனக்குச் சிறப்பானதாகத் தோன்ற வில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடந்த 2014ஆம் ஆண்டு அடி லெய்டில் நான் அடித்த சதத்தை இன்னும் என் னால் மறக்க முடியாது. "2வது இன்னிங்ஸில் 364 ஓட் டங்களை விரட்டியபோது நான் அடித்த அந்தச் சதம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.
"இங்கிலாந்து அணிக்கு எதிராக நான் இப்போது அடித்த சதம் எனக்கு மகிழ்ச்சியை அளித் தாலும் சிறப்பானதல்ல. "இந்திய அணியைக் குறைந்த பட்சம் 15 ஓட்டங்கள் முன்னிலை யாகவேண்டும் என நினைத்திருந் தேன். ஆனால், அதற்குள் நான் ஆட்டமிழந்தது வேதனையளிக் கிறது. நாங்கள் இன்னும் சிறப் பாகப் பந்துவீசி இருக்க வேண்டும்," என்றார்.