எட்ஜ்பாஸ்டன்: இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் சதத் தைப் பதிவு செய்து உள்ளார். 1000மாவது டெஸ்ட் கிரிக் கெட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்கள் எடுத் தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே சரிவாக அமைந்தது.
முரளி விஜய் (20), தவான் (26), லோகேஷ் ராகுல் (4) ஆகி யோர் இங்கிலாந்தின் சாம் கர்ரன் பந்துவீச்சில் சொற்ப ஓட்டங்களுக்கு வெளியேறினர். தொடர்ந்து சீரான இடை வெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்த போதும் சரியான பங்காளித் துவம் அமையாத போதும் அபாரமாக ஆடிய கோஹ்லி சதம் கடந்து 149 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 5 டெஸ்ட் டில் 134 ஓட்டங்கள் மட்டும் எடுத்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட கோஹ்லி, தற் போது அதற்கு தக்க பதிலடி கொடுத்து உள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் முதல் சதத்தைப் பதிவுசெய்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, திருமண மோதிரத்தை முத்தமிட்டு மனைவி அனுஷ்கா சர்மாவோடு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். படம்: ராய்ட்டர்ஸ்