அடுத்த மாதம் முதல் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி

புதுடெல்லி: அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது அதிகரிக்கப்பட்ட வரி விதிப்பை, செப்டம்பர் 18ஆம் தேதிக்கு இந்தியா ஒத்தி வைத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்கா வரி விதிப்பை அதிகப்படுத்தியது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாதாம், வால்நட், ஆப்பிள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது வரி விதிப்பை அதிகப்படுத்தக் கடந்த ஜூனில் இந்தியா முடிவு செய்தது. இந்த 20 விழுக்காடு வரி விதிப்பு உயர்வு இதுவரை நடைமுறைக்கு வராத நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே நேற்று முதல் இந்த வரி உயர்வு நடை முறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்த வரி உயர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சரும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் செப்டம்பரில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் வரி உயர் வுக்குப் பதிலடியாக இந்தியா மட்டுமல்லாமல் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும்கூட அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை உயர்த்தின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!