கரூர்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா கட்சி என்றால் அது இனி அமமுகதான் என்று குறிப் பிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல், சட்டப் பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் முன்பே தன் கட்சி சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர்களை அறிவித்து வருகி றார் தினகரன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "திருப்பரங்குன்றம் இடைத்தேர் தலில் அமமுக போட்டியிடுவது உறுதி. எங்கள் கட்சி வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவ தும் உறுதி," என்றார் தினகரன். முட்டை கொள்முதல் ஊழல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத் தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆகியவை தொடர் பில் சிபிஐ விசாரிக்க வேண்டிய தேவை வரும் என்று குறிப்பிட்ட அவர், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட் டதில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது என்றார்.
"எம்ஜிஆர் முதல்வராக இருந்த போதுதான் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு துவக்கப்பட்டது. அதில் பல அதிகாரிகள் பொறுப் பில் இருந்துள்ளனர். "இருப்பினும் பொன். மாணிக்க வேல் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலைக ளையும் கூட அவர் கண்டு பிடித் துள்ளார். இந்நிலையில் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்கத் தேவையில்லை," என்றார் தினகரன்.
அமமுக குறித்து விமர்சிக்கும் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை கரூர் தொகுதியில் போட்டியிட முன்வரட்டும் என்று குறிப்பிட்ட அவர், தம்பிதுரை எவ் வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் என பார்த்து விடுவோம் என சவால் விடுக்கும் தொனியில் பேசினார்.