நான்ஜிங்: உலகப் பூப்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். சீனாவின் நான் ஜிங் நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. காலிறுதிச் சுற்றில் ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவைச் சந்தித்த சிந்து 21=17, 21=19 என நேர்செட்களில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற பூப்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஒகுஹாராவிடம் தோற்றார் சிந்து. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதியில் ஒகுஹாராவை வீழ்த்தி பழிதீர்த்துக்கொண்டார் சிந்து.
தொடக்கத்தில் ஒகுஹாரா சிறப்பாக விளையாடி முன்னிலை வகித்தார். ஆனால் துவளாமல் பதிலடி கொடுத்த சிந்து தமது ஒகுஹா ராவின் வெற்றிக் கனவைக் கலைத்தார். சிந்து தமது மட்டையை ஓங்கி அடித்தபோதெல்லாம் ஷட்டல்காக்கை நோக்கி பாய்ந் தார் ஒகுஹாரா. ஆனால் சிந்துவின் மட்டை யிலிருந்து கிளம்பிச் சென்ற ஷட்டல்காக் மின்னல் வேகத்தில் செல்ல அதை மீட்பதில் சிரமப் பட்டார் அவர். இறுதியில் சிந்துவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒகுஹாரா சரணடைந் தார்.