‘ஆண்களுக்கு ஈடாக பெண்களுக்கு மரியாதை கிடைப்பது இல்லை’

நடிகை ராய்லட்சுமி கதாநாயகியாக அறிமுகமானாலும் ஒரு சில படங்களில் மட்டுமே அவரால் அந்த அந்தஸ்தைத் தக்கவைக்க முடிந்தது. நடிப்பைவிட அவரது கவர்ச்சிக்கு மட்டுமே இயக்குநர் களால் முக்கியத்துவம் தரப்பட்டது. நடிப்புத் திறமை கைகொடுக்கா விட்டாலும் கவர்ச்சி கைவிடாததால் அதை ஏற்றுக்கொண்டு தற்போது கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை ஒரு சுற்று வருகிறார். 'நீயா 2'ஆம் பாகம் உள்ளிட்ட 4 படங்களில் தற்போது நடித்து வருகிறார். திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப் படுவது பற்றிய சர்ச்சை குறித்து கேட்டபோது, "திரைப்படத்துறையில் மட்டுமல்ல பொதுவாகவே சமுதாயத்தில் பெண்களுக்கு மரியாதை பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது. அதுவும் வேலைக்காக புதிதாக வரும் பெண்கள் இதுபோன்ற தொல்லைக்கு உள்ளாகிறார்கள். எனக்கு அதுபோன்ற அனுபவம் ஏற்பட்டதில்லை. திரைத்துறையில் புதிதாக வருபவர்களைக் குறை சொல்வதற்கு என்றே நிறைய பேர் இருக்கிறார்கள். அது பாலியல் தொல்லை பற்றிய சர்ச்சையாக மட்டுமல்லாமல் மேலும் வெவ்வேறு வடிவங்களில் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!