பெட்டாலிங் ஜெயா: மலேசிய அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் நிதியாளர் லோ டெக் ஜோவுக்குச் சொந்தமான 'இகுவெனிமிட்டி' என்ற சொகுசுக் கப்பல், இந்தோனீ சியாவிலுள்ள பாத்தாம் தீவுக்கு அருகில் இருப்பதாக மூத்த கடற் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். ' 'ஜோ லோ' என அழைக்கப்படும் லோவின் கப்பலை இந்தோனீசி யாவிடமிருந்து பெற மலேசிய அரசாங்கம் தேவையான ஏற்பாடு களைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்தக் கப்பல் இன்று பாத்தாமின் 'பத்து அம்பார்' துறைமுகத்தை அடையும் என்றும் 'தி ஸ்டார்' நாளிதழ் தெரிவித்தது. இந்தோனீசிய அரசாங்கம் அனு மதித்தால் கப்பல் அங்கிருந்து மலேசியாவின் ஜோகூர் மாநிலத் திலுள்ள துறைமுகம் ஒன்றுக்குப் புறப்படும் என்றும் அந்நாளிதழ் கூறியது.
'ஜோ லோ'வின் ஆகப் பெரும் சொத்தாகக் கருதப்படும் 'இகுவெ னிமிட்டி' கப்பல், 1எம்டிபி பண மோசடி நடவடிக்கைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க நீதித்துறையும் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவின் அரசாங்கமும் கூறி வருகின்றன.