ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவின் சாலைகளில் 'பொக்கோ பொக்கோ' நடனத்தை நேற்று ஆடிக்கொண்டிருந்த பல்லா யிரக்கணக்கான மக்களுடன் இந்தோனீசிய அதிபர் ஜோக் கோ விடோடோவும் சேர்ந்து ஆடினார். இந்தோனீசியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு களைக் கொண்டாடுவதற்காக அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆட்டத்திற்கு ஆக நீளமான வரிசையை அமைத்து அதனை கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்வதே நிகழ்ச்சியில் பங்கேற்றோரின் நோக்கம். இவர்கள் மட்டுமின்றி ஏறத்தாழ 120,000 சிறைக் கைதிகள், அவரவர் சிறை களில் இருந்தபடியே ஆடிக் கொண்டிருந்தனர். "பொக்கோ பொக்கோ நடனம் மூலமாக உலகம் இந்தோனீசியாவை அங்கீ கரிக்கும். இந்தோனீசியர்கள் அனைவரின் பொதுவான இலட்சியமாக இது உள்ளது," என்று நடனத்தில் பங்கேற்ற மிலா ஹர்ட்ஜோ தெரிவித்தார்.
'பொக்கோ பொக்கோ' நடனத்தில் ஈடுபடும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (வலமிருந்து மூன்றாவது). அவருக்குப் பக்கத்தில் துணை அதிபர் யூசோஃப் கல்லா. படம்: ராய்ட்டர்ஸ்