தலைவரானார் அன்வார்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவை ஆளும் கூட்டணியைச் சேர்ந்த கெஅடிலான் கட்சியின் புதிய தலைவராக திரு அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்குள் வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண் டும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால் திரு அன்வாரை எதிர்த்து யாரும் போட்டியிடாத தால் அவர் கட்சியின் தலைவர் என அதிகாரபூர்வமாக அறிவிக் கப்பட்டார்.

ஒரே பாலினச் சேர்க்கை, ஊழல் ஆகிய குற்றங்கள் தொடர்பாக 1998ஆம் ஆண்டில் திரு அன்வார் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 1999ஆம் ஆண்டில் கெஅடிலான் கட்சி நிறுவப்பட்டது. கட்சி தொடங்கியதிலிருந்து திரு அன்வாரின் மனைவியும் மலேசியாவின் தற்போதைய துணைப் பிரதமருமான திரு வாட்டி வான் அசிஸா வான் இஸ்மாயில் அதன் தலைவராக இருந்து வந்தார்.

கெஅடிலான் கட்சியின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட திரு அன்வார் இப்ராஹிம். படம்: தி ஸ்டார் நாளிதழ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!