புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் அரங்கேறிய ஊழல் களை நாட்டு மக்களிடம் அம் பலப்படுத்தப்போவதாக காங் கிரஸ் தெரிவித்துள்ளது. இதற்காக தேசிய அள விலான பிரசாரத்தை மேற் கொள்ளப்போவதாகவும் அக் கட்சி கூறியுள்ளது. குறிப்பாக வங்கி மோசடிகள், ரஃபேல் போர் விமான ஒப்பந் தம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பிரச்சினைகளை மக்களிடத்தில் விரிவாக எடுத் துரைக்க காங்கிரஸ் தலைவர் கள் திட்டமிட்டுள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழ லுக்கு நடுவே டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தின்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், அசோக் கெலாட் ஆகியோர் கலந்துகொண்டனர். மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் அடுத்த சில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள இந்த நிலைப் பாடு அரசியல் அரங்கில் எல்லாத் தரப்பினரது கவ னத்தையும் ஈர்த்துள்ளது.