சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் திமுகவினரும் கருணா நிதி ஆதரவாளர்களும் மீண்டும் கவலையில் மூழ்கியுள்ளனர். கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றியுள்ள கருணாநிதிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடையில் அவரது உடல்நிலை யில் திடீர் பின்னடைவு ஏற்பட்ட தாகவும், எனினும் சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை சீரடைந்த தாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் திமுகவினர் நிம்மதி அடைந்தனர். தற்போது நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தாரிடம் நேரில் விசாரித்தறிந்து செல்கின் றனர்.
இந்நிலையில் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது என்று தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்குரிய சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட் டுள்ளது. இதற்கிடையே முன்னாள் மத் திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு மருத்துவர் தலைமை யிலான குழு கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சையைத் தொடர்ந்து கண்காணித்து வருவ தாகத் தெரிகிறது.
கருணாநிதியின் உடல் நிலை யில் வேறு எந்த பெரிய அளவிலான மாற்றமும் இல்லை என்றும் கூறப் படுகிறது. கருணாநிதிக்கு கல்லீரலில் சிறு பாதிப்பு இருப்பதாக அண்மை யில் தகவல் வெளியானது. இதை யடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் கைதேர்ந்தவரான மருத்துவர் முகமது ரேலா அவ ருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறப்பட்டது. அதன்படி முகமது ரேலா தலை மையிலான குழுவினர் தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவரது பிள்ளைகளிடம் விசாரித்த அதிபர் ராம் நாத் கோவிந்த் (வலக்கோடி). படம்: தமிழக ஊடகம்