சிங்ஹெல்த் மீது மேற்கொள் ளப்பட்ட இணையத் தாக்குதல் மூலம் 1.5 மில்லியன் நோயாளி களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்த கவலைகள் நில வும் வேளையில் அத்தரவு களும் அடையாளங்களும் தவ றாகப் பயன்படுத்தப்படாமல் தடுக்க ஏராளமான பாதுகாப்பு நடைமுறைகள் நடப்பில் உள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று நாடாளு மன்றத்தில் இதற்கான உறு தியை அளித்தார். கவலைகள் நிலவுவதை ஒப்புக்கொண்ட அமைச்சர், "ஆபத்துகளைக் குறைப்பதற்குப் போதுமான பல்வேறு பாதுகாப்பு நடைமுறை கள் நடப்பில் உள்ளன.
"குறிப்பாக, நிதிப் பரிவர்த் தனைகள், அரசாங்கத்தின் ரகசிய இணையப் பரிவர்த்த னைகள் ஆகியவற்றை இவை பாதுகாக்கும்," என்றார். இணையப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்ச ருமான திரு ஈஸ்வரன். இணையத் தாக்குதல் ஆபத்து களைக் குறைக்கும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி மன்றத்தில் விவரித்தார். வங்கிகள், காப்புறுதி நிறு வனங்கள் போன்ற நிதி அமைப் புகள் தங்களது வாடிக்கையாள ரின் அடையாளத்தைச் சரி பார்க்க தனிப்பட்ட தகவல்களை மட்டுமே சார்ந்திருப்பதில்லை என்றார் அவர்.