கெப்பல் கார்ப்பரேஷன் அரசாங்கம் தொடர்புடைய, முற்றிலும் வர்த்தக ரீதியில் செயல்படுகின்ற வெற்றிகர மான நிறுவனத்திற்கு அருமையான ஓர் எடுத்துக்காட்டு என்று திரு லீ தெரிவித்து இருக்கிறார். அந்த நிறுவனத்தின் 50வது ஆண்டுவிழா விருந்தில் நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய திரு லீ, பாதகங் களைச் சாதகங்களாக மாற்றிக் கொண்ட பெரிய உள்ளூர் நிறுவனம் என்று கெப்பல் நிறுவ னத்தை வர்ணித்தார். புதுப்புது முயற்சிகளை எடுக்க அந்த நிறுவனம் தயங்கியதில்லை என்றார் அவர். "சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கு கெப்பல் நிறுவனம் உதவி இருக்கிறது.
"அனைத்துலக அளவில் பிர பலமான நிறுவனமாகத் திகழ் கிறது. பல சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி இருக்கிறது. ஆகையால், அந்நிறு வனத்தின் வெற்றி சிங்கப்பூரின் வெற்றி," என்றார் திரு லீ. கெப்பல் நிறுவனம் சிங்கப்பூரின் பொறியியல் ஆற்றல் மேம்படவும் உதவி இருக்கிறது என்றார் அவர். வெளிநாடுகளில் தொழிலில் விரிவடைந்து மாபெரும் வெற்றி யைச் சாதித்து இருக்கும் முதலா வது சிங்கப்பூர் நிறுவனங்களில் ஒன்றாக கெப்பல் திகழ்கிறது என்றும் திரு லீ குறிப்பிட்டார். "வெளிநாடுகளில் தொழிலில் ஈடுபட்டு உலகம் முழுவதும் பரவ வேண்டிய தேவை கெப்பலுக்கு இருக்கிறது. அதே வேளையில், உயர்தர நேர்மையையும் செயல்திற னையும் அது கட்டிக்காக்க வேண்டியதும் முக்கியம். "இளம் சிங்கப்பூரர்களை கட லோர மற்றும் கடல் தொழில்துறை வேலைகளில் அமர்த்துவது கெப்பல் எதிர்நோக்கும் மற்றொரு சவால்," என்றார் பிரதமர்.