சீனாவும் ஆசியானின் 10 நாடு களும் சாங்கி கடற்படைத் தளத்தில் ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா கப்பலில் வியாழக்கிழமை தங்களு டைய முதலாவது ஆசியான்-சீனா கடற்படை பயிற்சியை நடத்தின. இந்த 11 நாடுகளின் கடற்படை களும் கலந்துகொள்ளும் களப் பயிற்சியை சீனாவில் நடத்த இரு தரப்புகளும் திட்டமிட்டுள்ளன. சாங்கி கடற்படைத் தளத்தில் நடந்த இரண்டு நாள் இணையப் போர் பயிற்சியில் உண்மையான களப் பயிற்சிகள் இடம்பெறவில்லை. இந்த இணையப் போர் பயிற்சியை சிங்கப்பூர் கடற்படை நடத்தியது. அனைத்துலகக் கடற்பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மோதிக் கொள்வது, எண்ணெய்க் கப்பல் களில் தீப்பிடிப்பது போன்ற சம்பவங்கள் நிகழும்போது எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் பயிற்சியில் கலந்துகொண்ட நாடுகள் ஒத்துழைத்தன. சீனா, சிங்கப்பூர் இரு நாடு களும் இணைந்து தலைமை தாங்கி ஆசியான்-சீனா கடற்துறை களப்பயிற்சி என்ற பயிற் சியை அக்டோபர் மாதம் நடத்தும்.
சாங்கி கடற்படைத் தளத்தில் 'ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா'வில் சிங்கப்பூர் குடியரசு கடற்படை ஏற்று நடத்திய இரண்டு நாள் ஆசியான்-சீனா இணையப் போர் பயிற்சி நேற்று முடிவடைந்தது. படம்: வான் பாவ்