சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ள தாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. கருணா நிதியின் உடல்நிலை மோசம் அடைந்ததாக பரவிய தகவலை யடுத்து நேற்று மாலை மருத்துவ மனை முன்பு ஏராளமான திமுக வினர் கூடினர். கருணாநிதி உடல் நிலை மீண்டும் மோசமடைந்ததாக தமிழகக் காங்கிரஸ் தலைவர் திரு நாவுக்கரசர் நேற்று தெரிவித்ததை யடுத்து, திமுகவினர் பதற்றம் அடைந்தனர். நேற்று மாலை மு.க. ஸ்டாலின், அழகிரி, ஆ. ராசா, தயாளு அம்மாள் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்தனர். இந் நிலையில் மருத்துவமனை அறிக்கை வெளியானது.
அதில், கருணாநிதியின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதில் சிக்கல் நிலவுவதாக குறிப்பிடப் பட்டிருந்தது. வயது முதிர்வு கார ணமாக உடல்நிலையில் ஏற்பட் டுள்ள பின்னடைவை சீர் செய்ய வும் உடல் உறுப்புகள் சீராகச் செயல்படவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.