சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியான உமா மீது புது குற்றச்சாட்டு எழுந் துள்ளது. பல்கலைக்கழகத்துக்கு சான் றிதழ்களை அச்சடிக்க சில விதி களை மீறி அவர் ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே விடைத்தாள் மறு கூட்டலில் சில பேராசிரியர்களுடன் இணைந்து அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து உமாவும் இரு பேராசிரியர்களும் பணியிடை நீக் கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழ் களை அச்சடித்துத் தரும் ஒப் பந்தப் பணியைப் பல்வேறு விதி முறைகளை மீறி குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு உமா அளித்த தாகக் கூறப்படுகிறது.
ரூ.62 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணியை அவர் போலி நிறுவனத்துக்கு அளித்திருப்பதா கவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியான செய்தி குறித்து விளக்கமளிக்கு மாறு பல்கலைக்கழக துணைவேந் தருக்கு ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.