கோலாலம்பூர்: பிகேஆர் எனப்படும் கெஅடிலான் கட்சி யின் தலைவர் தேர்தலில் திரு அன்வார் இப்ராகிம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலை யில் அவரது மனைவி வான் அசிஸா, துணைப் பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார். அத்துடன் பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப் பிலிருந்து விலகி தன் கணவருக்காக அந்த இடத்தை விட்டுக் கொடுக்கப்போவதாக வெளிவந்த தகவலையும் அவர் மறுத்துள்ளார். கெஅடிலான் கட்சித் தலைவராக இருந்த வான் அசிஸா, இம்முறை போட்டி யிடாமல் தனது கணவருக்கு விட்டுக்கொடுத்துள்ள நிலையில் அடுத்து துணைப் பிரதமர் பதவி மற்றும் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றில் இருந்தும் விலகுவார் என கருதப்பட்டது.
இதனை திருமதி வான் அசிஸா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதற்கிடையே கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி, கட்சித் தலைவர் பதவிக்கு அன்வார் போட்டியின்றி வென்றிருப்பது அவருக்குக் கட்சியில் அனை வரும் ஒருமித்த ஆதரவை வழங்கியுள்ளனர் என்பதற்கு ஆதாரம் என்று தெரிவித்தார்.